ராணுவ தொப்பியுடன் களமிறங்கும் இந்திய அணி! காரணம் தெரிந்தால் கண்கலங்கும்
Indian team with army cap in 3rd odi
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ரான்ஜியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணி வீரர்கள், இந்திய ராணுவ வீரர்கள் அணியும் தொப்பியை அணிந்து விளையாடுகின்றனர்.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களை நினைவு கூறும் வண்ணம் இந்திய அணியின் வீரர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆட்டம் துவங்குவதற்கு முன்னர் ராஞ்சியில் பிறந்தவரும் இந்தியாவின் மூத்த வீரர் என்ற முறையில் தோனி அனைத்து வீரர்களுக்கும் அந்த தொப்பியினை வழங்கினார்.
வெறுமனே தொப்பியோடு நின்று விடாமல், இந்த போட்டியின் மூலம் வீரர்களுக்கு கிடைக்கும் மொத்த வருமாணத்தையும் நாட்டின் பாதுகாப்பு படைக்கும், தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களின் நலனுக்காகவும் அர்பணிக்கவுள்ளனர்.
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நாடு முழுவதும் உள்ள அனைவரும் நாட்டின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து நிதி உதவி அளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தான் இந்த தொப்பியை அணிந்து ஆடுவதாக கூறினார்.