காமன்வெல்த் போட்டி 2022-ல் வரலாற்று சாதனை.! உலக நாடுகளை திரும்பிப் பார்க்கவைத்த இந்திய பெண்கள் அணி.!
காமன்வெல்த் போட்டி 2022-ல் வரலாற்று சாதனை.! உலக நாடுகளை திரும்பிப் பார்க்கவைத்த இந்திய பெண்கள் அணி.!
22-வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 77 நாடுகள் பங்கேற்றுள்ள காமன்வெல்த் போட்டிகள் வரும் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது.
காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி 6-வது இடத்தில் உள்ளது. 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்று இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. புல்வெளி பந்துவீச்சு(Lawn Bowls) போட்டியில் இந்திய மகளிர் பவுண்டரிகள் அணி செவ்வாய்க்கிழமை தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தது.
புல்வெளி பந்துவீச்சு (Lawn Bowls) போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பதால் இது ஒரு வரலாற்று சாதனையாக அமைந்தது. இந்திய அணி இறுதிப்போட்டியில் 17-10 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. காமன்வெல்த் போட்டி வரலாற்றில் புல்வெளி பந்துவீச்சு போட்டியில் முதல் முறையாகா தங்கம் வென்று உலக நாடுகளை திரும்பிப் பார்க்கவைத்துள்ளது இந்திய பெண்கள் அணி.