இந்திய அணி தோல்வி அடைந்தாலும் ஆறுதலாக அமைந்த இரண்டு முக்கிய விஷயங்கள்..!
Indian wicket keepers 100 outside India record
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 தொடரை 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று, தற்போது 0-3 என்ற கணக்கில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் படு தோல்வியை சந்தித்துள்ளது. இன்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியையே சந்தித்துள்ளது.
முதலாவதாக களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் அடித்தது, இதனை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 47.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 300 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தாலும் கே.எல் இன்று சிறப்பாக விளையாடி 113 பந்துகளில் 112 ரன்கள் அடித்தார். இதன் மூலம், வெளிநாட்டில் சதம் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார் KL ராகுல். இதற்கு முன்னர் ராகுல் டிராவிட் 1999 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆட்டத்தில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.
இன்றைய ஆட்டத்தில் மற்றொரு சாதனையும் நடந்துள்ளது. ராகுலுடன் இணைந்து அதிரடியாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் 63 பந்துகளில் 62 ரன்கள் அடித்தார். இதன் மூலம் முதல் 16 ஒருநாள் போட்டிகளில் 748 ரன்கள் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஷ்ரேயஸ் ஐயர்.