நல்ல ஃபார்மில் இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்பட்ட பின்னடைவு! இந்திய அணிக்கு சாதகமா??
injured to austrelian player
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறுகிறு. முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் ஜூலை 11ம் தேதி மோதுகின்றன.
உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது. இதுவரை 2 தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ள ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணியினை வென்றால் இறுதிப்போட்டி இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நடுவரிசை வீரர் உஸ்மான் கவாஜா விலகியுள்ளார். அவருக்கு தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி லீக் போட்டியின் போது தொடையில் காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக அடுத்த 3 அல்லது 4 வாரங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்தநிலையில், அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் மேத்யூ வாட் களமிறங்க உள்ளார். இதே போன்று ஆஸ்திரேலியா அணியின் மற்றொரு ஆல்-ரவுண்டரான மார்கஸ் ஸ்டோய்னிஸ்க்கும் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவருக்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.