ஐபிஎல் வரலாற்றில் முதன்முதலாக படைக்கப்பட்ட சாதனைகள்; பெங்களூருவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத்.!
ipl 2019 - 11th leek - srh vs rcb - new records srh
டி20 போட்டிகளில் ஒரு வீரர் சதம் அடிப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் வார்னர், பேர்ஸ்டோவ் இருவரும் சதம் அடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
ஹைதராபாத்தில் நேற்று நடந்த 11வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர், பேர்ஸ்டோவ் இருவரும் ஆரம்பம் முதலே மாறி மாறி அதிரடியாக ரன்களை குவிக்க துவங்கினர். இவர்களது ரன் குவிப்பை கட்டுப்படுத்தமுடியாமல் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் திணறினர். இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாததால் இருவரும் சதம் அடித்து அசத்தினார்.
இதனால் அந்த அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 231 ரன்களை குவித்தது. அதன் பிறகு களமிறங்கிய பெங்களூரு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனால் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு போட்டியில் ஒரே அணியில் இடம்பெற்ற இரண்டு வீரர்களும் சதம் அடித்து புதிய சாதனையை படைத்தனர்.
மேலும், ஐபிஎல்., அரங்கில் அதிக ரன்கள் சேர்த்த துவக்க ஜோடி என்ற பெருமையையும் பெற்றனர்.
185 டேவிட் வார்னர் - பேரிஸ்டோவ் (ஹைதராபாத்) எதிர்- பெங்களூரு, ஹைதராபாத், 2019
184* காம்பிர் - கிறிஸ் லின் (கொல்கத்தா) எதிர்- குஜராத், ராஜ்கோட், 2017
167 கிறிஸ் கெயில் - தில்ஷன் (பெங்களூரு) எதிர்- புனே வாரியர்ஸ், பெங்களூரு, 2013
163* சச்சின் - டுவைன் ஸ்மித் (மும்பை) எதிர்- ராஜஸ்தான் ராயல்ஸ், ஜெய்பூர், 2012