×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்று முடிவு-1 வாய்ப்புகள் இத்தனையா அதிர்ஷ்டம் யாருக்கு? உச்ச கட்டத்தை நெருங்கும் ஐபிஎல் தொடர்.!

ipl 2019 - 56th leek - mi vs kkr - srh - 3changes

Advertisement

இன்று நடைபெற இருக்கும் மும்பை, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவு பல கேள்விகளுக்கு விடை தர உள்ளதால் இன்றைய போட்டி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் உச்ச கட்டத்தை நெருங்கியுள்ளது என்றே சொல்லலாம்.

நடந்து வரும் 12 ஆவது ஐபிஎல் தொடரின் 54 ஆவது ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் எளிமையான வாய்ப்பினை ஹைதராபாத் அணி தவறவிட்டுள்ளது. இந்த போட்டியில் வென்றிருந்தால் 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை தக்கவைத்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கலாம்.

 

கொல்கத்தா அணி இன்று மும்பை அணியுடன் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணி தோற்றதன் மூலம் தற்பொழுது கொல்கத்தா அணி மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் மும்பை அணியை கொல்கத்தா வீழ்த்தினால் 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.

அதே நேரத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக கடைசியாக விளையாடிய மும்பை அணி அந்த அணி நிர்ணயித்திருந்த மிகப்பெரிய இலக்கான 220 ரன்களை நெருங்கி கடுமையான முயற்சிகளுக்கு இடையே தோல்வியை தழுவியது. இன்று நடைபெற கூடிய போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மும்பை அணி செயல்படும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில், இப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் இப்போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் மும்பை அணி செயல்படும். அதேவேளையில் கொல்கத்தா அணி தோல்வியுற்றால் ஹைதராபாத் அணி இருக்கு ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும்.

நேற்றைய போட்டியில் பெங்களூருக்கு எதிராக ஹைதராபாத் அடைந்த தோல்வியால் மகிழ்ச்சியடைந்தது கொல்கத்தா. இன்று மும்பை அணிக்கு எதிராக தோல்வியுற்றால் ஹைதராபாத் அணி மகிழ்ச்சி அடையும் நிலை உருவாகும்.

இதனால் இன்றைய மும்பை, கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெறக்கூடிய போட்டியின் முடிவானது மும்பை முதலிடத்தைப் பிடிக்குமா அல்லது ப்ளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா அணியை அனுமதிக்குமா அல்லது ஹைதராபாத் அணி செல்ல வழி வகுக்குமா என்று இன்றைய ஆட்டம் தான் முடிவு செய்யும்.

இறுதியாக மும்பை அணி வென்றால் இரண்டு வாய்ப்புகள் நிகழும் அதேவேளையில் கொல்கத்தா அணி வென்றால் ஒரு வாய்ப்பு தான் அமையும் நிகழும். இதனால் இன்றைய போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2019 #mi vs kkr #hydrabad
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story