வாட்சன்: வேறு அணியில் இருந்தால் கண்டிப்பாக நீக்கப்பட்டு இருப்பேன்; எல்லாம் தல தோனியின் தயவு தான்.!
ipl 2019 - csk vs srh - csk win - shane watson - 96 runs
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 40 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் நேற்று மோதின. சென்னையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோணி கைதராபாத் அணியை பேட் செய்ய அழைத்தார்.
முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். ஹைதராபாத் அணி சார்பாக மனிஷ் பாண்டே 83 ஓட்டமும், வார்னர் 57 ஓட்டமும் எடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டம் எடுத்தது.
176 ஓட்டம் என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் அதிரடி வீரர் டுப்ளஸி தொடக்கத்திலையே ஆட்டம் இழந்தார். இந்நிலையில் இந்த ஐபில் சீசனில் ஒரு போட்டிகளில் கூட சோபிக்காத வாட்சன் நேற்றைய ஆட்டத்தில் மிக சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் 96 ஓட்டம் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இந்த சீசனில் 10 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட 50 ரன்களை கடக்காத வாட்சன் நேற்றைய ஆட்டத்தில் 96 ரன் எடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு பேருதவி புரிந்தார்.
இதுகுறித்து வாட்சன் கூறுகையில், ‘நான் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடாதது எனக்கே புரிந்தது. இந்நேரம் வேறு அணியில் இருந்தால் கண்டிப்பாக நீக்கப்பட்டிருப்பேன். ஆனால் பயிற்சியாளர் பிளமிங் மற்றும் கேப்டன் தோனி என்மீது நம்பிக்கை வைத்தனர். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.’ என்றார்.