பொய் சொல்ல விரும்பல கொஞ்ச காண்டாதா இருக்கு; மனம் திறக்கும் ரிஷப் பண்ட்.!
ipl 2019 - rr vs dc - world cup 2019 - rishabphant
ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சிறப்பாக ஆடி டெல்லி அணியை வெற்றி பெற வைத்த ரிஷப் பண்ட் உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியில் தேர்வாகாதது குறித்து முதன் முறையாக தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் ரஹானே சிறப்பாக ஆடி ஐபிஎல் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தினை அடித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆடிய ரஹானே 105 ரன்கள் அடித்தார். கேப்டன் ஸ்மித் 50 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது.
சற்று கடினமான இலக்கை துரத்தி பிடிக்கும் கட்டாயத்தில் பேட்டிங் செய்ய துவங்கிய டெல்லி அணிக்கு தவான் இந்த ஆட்டத்திலும் சிறப்பான துவக்கத்தை அளித்தார். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய தவான் 27 பந்துகளில் 54 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்னில் ஆட்டமிழக்க, ரிசப் பண்ட் மற்றும் பிரிதிவி ஜோடி சேர்ந்தனர்.
இவர்கள் இருவரும் வழக்கத்திற்கு மாறாக மிகவும் கவனமுடன் பொறுமையாக ஆடி ரன் வேகத்தை உயர்த்தினார். சற்று அதிரடியாக ஆடிய ரிசப் பண்ட் அரைசதமடித்தார். பொறுமையாக ஆடிய பிரிதிவி 42 ரன்னில் ஆட்டமிழந்தார். இப்போட்டியில் அதிரடியில் மிரட்டிய பண்ட் 36 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 78 ரன்கள் அடித்து மிரட்டினார்.
இந்நிலையில் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசிய ரிஷப் பண்ட்: அணியின் வெற்றிக்கு கைகொடுப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். உலகக்கோப்பை அணிக்கான தேர்வில் இடம் பெறாதது குறித்து பொய் சொல்ல விரும்பவில்லை. கொஞ்சம் காண்டாகத்தான் உள்ளது.’ என்றார்.