×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடிபட்ட புலி, கிங் கோலியின் படை 'இன்று பாயுமா அல்ல மீண்டும் பதுங்குமா' டெல்லியுடன் இன்று பலப்பரீட்சை.!

ipl 2019 - today 20th leek - rcb vs dc

Advertisement

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதுவரை 19 போட்டிகள் முடிவு பெற்றுள்ளது. அணைத்து அணிகளும் கோப்பையை வெல்ல தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்து சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

இதுவரை நடைபெற்ற ஐந்து லீக் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்று நடக்கும் 20 ஆவது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. இதனால் இன்றைய போட்டியிலாவது பெங்களூர் அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் அந்த அணியின் ரசிகர்கள் உள்ளார்கள்.

நான்கு போட்டிகளில் தொடர் தோல்வியை தழுவிய பெங்களூரு அணி கடந்த ஐந்தாவது போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே இலக்கோடு விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி துவக்கம் முதலே அதிரடியாக ரன்களை குவித்தனர். விராட் கோலி 49 பந்துகளில் 84 ரன்களும், டிவிலியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்களும் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணிக்கு வெற்றி இலக்காக 206 ரன்களாக அமைந்தது.

ஆனால் அந்த அணியின் மோசமான பந்து வீச்சு காரணமாக கொல்கத்தா அணிக்கு கடைசியாக களமிறங்கிய அந்த அணியின் ரசல் 13 பந்துகளில் 48 ரன்கள் குவித்து பெங்களூருவின் வெற்றி கனவை தகர்த்து எறிந்தார். இதனால் ஒரு போட்டியிலும் வெற்றி பெறாத பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

அதேவேளையில் டெல்லி அணி விளையாடிய 5 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ப்ரித்வி ஷா கொல்கத்தா அணிக்கு எதிராக 99 ரன்களை குவித்தார். மேலும் ரிஷபன்ட் மும்பை அணிக்கு எதிராக 27 பந்துகளில் 78 ரன்களைக் குவித்திருந்தார். அதன் பிறகு அவர்கள் எந்த ஆட்டத்திலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

ப்ரித்வி ஷா, ரிஷபன்ட் இருவரும் தங்களது திறமையை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். மேலும் ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் தங்களது பழைய பார்முக்கு திரும்பி வரும் பட்சத்தில் டெல்லி அணி வெற்றி பெறலாம்.

அடிபட்ட புலியாக உள்ள பெங்களூரு அணியை பொறுத்தவரை தங்களது முதல் வெற்றியை ருசிக்க வேண்டும் ஆதங்கத்தில் உள்ளது. அதேவேளையில் டெல்லி அணிக்கு   இப்போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னேற வேண்டும் என்பது இலக்காக அமைந்துள்ளதால் இன்று பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2019 #rcb vs dc #rcb #Kohli
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story