புள்ளி பட்டியலில் பரிதாபமான நிலையில் சென்னை அணி! சி.எஸ்.கே எத்தனையாவது இடம் தெரியுமா?
ipl t20 csk current points table position

இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபில் கிரிக்கெட் போட்டிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது.
இதுவரை 10 போட்டிகள் நடந்துமுடிந்துள்ளநிலையில் டெல்லி அணி நான்கு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியனான மும்பை அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் இரண்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
ரசிகர்களின் பேராதரவை பெற்ற சென்னை அணி மூன்று போட்டிகளில் விளையாடியநிலையில் முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் அணியுடனும், மூன்றாவது போட்டியில் டெல்லி அணியுடனும் தோல்வியை சந்தித்த சென்னை அணி இரண்டு புள்ளிகளுடன் பரிதாபமாக ஏழாவது இடத்தில் உள்ளது.
இதுவரை ஒருமுறை கூட முதல் சுற்று போட்டிகளில் இருந்து வெளியேறாத சென்னை அணி இந்தமுறை இரண்டாவது சுற்றுக்கு செல்லுமா? அடுத்தடுத்த போட்டிகளில் சென்னை அணி வெற்றிபெறுமா என்ற ஏக்கத்துடன் சென்னை அணி ரசிகர்கள் காத்துள்ளனர்.