புவனேஸ்வர் ஓவரை பிரித்து மேய்ந்த சாம்சன்; 12வது சீசனில் புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தினார்.!
ipl2019 - 7th leek match- srh vs rr- samson - puvaneswar
நேற்றைய ஐபிஎல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சன் ரைஸர்ஸ் ஹைதெராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது. இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவின. இன்றைய போட்டியில் எந்த அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அந்த அணியின் துவக்க மட்டையாளர்கள் ரஹானே மற்றும் பட்லர் களமிறங்கினர்.
பட்லர் ஆரம்பத்திலே அவுட் ஆன நிலையில் அடுத்ததாக இறங்கிய சாம்சன் அதிரடியாக விளையாடினார். ரஹானே, சாம்சன் இருவரும் ஜோடி சேர்ந்து 122 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடி வந்த ரஹானே மூன்று சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 49 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.
4 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 55 பந்துகளில் 102 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.
இப்போட்டியில் ஹைதராபாத் பவுலர் புவனேஷ்வர் குமார் வீசிய 18வது ஓவரில், முதல் பந்திலேயே சிக்சர் பறக்கவிட்டார் சாம்சன். அடுத்த இரண்டு பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பிய சாம்சன், நான்காவது பந்தில் 2 ரன்கள் எடுத்தார்.
அடுத்த இரண்டு பந்திலும் பவுண்டரி அடித்த சாம்சன் அந்த ஓவரில் மட்டும் மொத்தமாக 24 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்தாண்டு ஐபிஎல்., அரங்கில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை கொல்கத்தா வீரர் சுனில் நரைனுடன் பகிர்ந்து கொண்டார்.