பந்துவீச்சிலேயே சதம் அடித்தாரா? பிரபல இளம் கிரிக்கெட் வீரரை விமர்சித்ததால் கொந்தளிக்கும் ரசிகர்கள்!
is bowler got century?
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் 24 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று முன்தினம் மோதியது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கானின் பந்துவீச்சை தெறிக்கவிட்டனர் இங்கிலாந்து மட்டையாளர்கள். ரஷீத் கான் வீசிய 9 ஓவர்களில் 110 ரன்களை கொடுத்துள்ளார். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த 2வது பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையில் இணைந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடியதால் மூலம், இளம் வயதிலேயே அணித்தலைவராகவும் ரஷீத் கான் உயர்ந்தார். கடந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் ஆடிய ரஷீத் கான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். ஆனால், இந்த உலகக்கோப்பை தொடரில் அவரது பந்துவீச்சு சற்று சொதப்பலானது.
இந்நிலையில், ஐஸ்லாந்து கிரிக்கெட் எனும் ட்விட்டர் பக்கத்தில் ரஷீத் கானை மோசமாக விமர்சித்து ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் சதம் அடித்திருக்கிறார். அதுவும் 54 பந்துகளில் 110 ஓட்டங்கள் எடுத்திருக்கிறார். உலகக் கோப்பையில் ஒரு பந்துவீச்சாளர் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோர். சிறப்பாக விளையாடினீர்கள் இளம் வீரரே என கூறப்பட்டுள்ளது. இந்த பதிவிற்கு பலதரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.