தொடர் தோல்வி! இதற்குமேல் சென்னை அணியால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியுமா? முழு விவரம் இதோ!
7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியடைந்த சென்னை அணி இனி அடுத்த சுற்றுக்கு முன்னேறமுடியுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியடைந்த சென்னை அணி இனி அடுத்த சுற்றுக்கு முன்னேறமுடியுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த மாதம் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய ஐபில் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 25 போட்டிகள் முடிந்துள்ளநிலையில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் புள்ளி பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
இதனால் ஐபில் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இதனிடையே கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் தலா 8 புள்ளிகளுடன் மூன்று மற்றும் நான்காம் இடத்தில் உள்ளது. 6 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி 5 வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் சென்னை அணி 6 வது இடத்திலும் உள்ளது.
7 போட்டிகள் விளையாடி 5 தோல்வி, 4 புள்ளிகளுடன் 6 வது இடத்திலும் இருக்கும் சென்னை அணி இனி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியுமா என்றால் நிச்சயம் முடியும். அதற்காக சென்னை அணி இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் நிச்சயம் சென்னை அணியால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
பொதுவாக, ஒரு அணி ஐபிஎல் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற, நிபந்தனைக்கு ஏற்ப 12 முதல் 16 புள்ளிகள் தேவை.
ஒரு அணி விளையாடும் 14 போட்டிகளில் 8 போட்டிகளில் வென்று 16 புள்ளிகளைப் பெரும் பட்சத்தில் அந்த அணி நிச்சயமாக ஐபிஎல்-ல் தகுதிபெற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல் மற்ற இடங்களில், 14 அல்லது 12 புள்ளிகளைக் கொண்ட ஒரு அணியும் மற்ற அணிகளின் செயல்திறன் மற்றும் நிகர ஓட்டத்தைப் பொறுத்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறலாம்.
ஆனலும் பல நேரங்களில் 14 புள்ளிகளை பெற்ற அணியினால் கூட அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதேநேரம் சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அணி 14 புள்ளிகளுடன் தகுதி பெற்றுள்ளது, மேலும், ஐபிஎல் 2019 இல், ஹைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.
எனவே சென்னை அணி மீதமுள்ள 7 போட்டிகளில் 7 அல்லது 6 போட்டிகளில் வெற்றிபெறும் பட்சத்தில் 18 அல்லது 16 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஒருவேளை சென்னை அணி 4 அல்லது 5 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெறும் பட்சத்தில் மற்ற அணிகளின் செயல்திறன் மற்றும் நிகர ஓட்டத்தைப் பொறுத்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறலாம்.