அந்த ஒரு ஓவரால் மூன்று வாரங்கள் தூக்கத்தை இழந்த இஷாந்த் சர்மா.. எந்த ஓவர் தெரியுமா?
Ishant sharma about 30 runs over against australia
2013 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 304 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலியா அடித்து வெற்றி பெற்றது.
பரபரப்பான இந்த போட்டியில் கடைசி 3 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணிக்கு 44 ரன்கள் தேவைப்பட்டது. 48 ஆவது ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். அந்த ஓவரில் ஆஸ்திரேலியா அணியின் ஃபாக்னர் 4 சிக்சர்கள் உட்பட 30 ரன்களை விளாசினார். அதன் பின்பு ஆட்டம் தலைகீழாக மாறியது.
தற்போது இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, "அந்த ஓவருக்கு பிறகு தாய் நாட்டிற்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக நினைத்து மன வேதனைக்கு உள்ளானேன். கிட்டத்தட்ட 3 வாரங்களாக நான் யாரிடமும் பேசவில்லை. அழுதுகொண்டே இருந்தேன்.
அந்த 3 வாரங்களும் சரியாக சாப்பிடவில்லை, தூங்க முடியவில்லை. என் காதலி தான் என்னிடம் பேசி என்னை தேற்றினார். இப்போது இதைப்பற்றி நினைத்தால் சிரிப்பாக தான் இருக்கிறது. ஆனால் அந்த சமயத்தில் நரக வேதனையாக இருந்தது" என கூறியுள்ளார்.