அம்பயரின் முடிவை அவமதித்த ஜேசன் ராய்க்கு என்ன தண்டனை தெரியுமா?
Jason roy fined for arguing with umbire
நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் சிறப்பாக ஆடினார். துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர் ஆஸ்திரேலியா பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்.
இலக்கு குறைவானதாகவே இருந்தாலும் மழை குறுக்குடும் என்ற பயத்தில் அதிரடியாகவே ஆடினர் இந்கிலாந்து பேட்ஸ்மேன்கள். குறிப்பாக ஜேசன் ராய் 5 சிக்சர்களை விளாசி 65 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார்.
சதமடிக்க இன்னும் 15 ரன்களே தேவை என்ற நிலையில் சதமடிக்கும் ஆசையில் இருந்தார் ஜேசன் ராய். ஆனால் கம்மின்ஸ் வீசிய ஆட்டத்தின் 20 ஆவது ஓவரில் ஜேசன் ராய் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். லெக் சைடில் விலகி சென்ற பந்தினை வளைத்து அடிக்க முயன்ற போது பேட்டின் பக்கத்தில் தான் பந்து சென்றது.
கீப்பர் மற்றும் பௌலர் கம்மின்ஸ் நீண்ட நேரம் முறையிடவே அம்பயர் தர்மசேனா அவுட் கொடுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜேசன் ராய் பிட்ச்சை விட்டு வெளியாராமல் அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஜேசன் ராய். இதன் காரணமாக ஜேசன் ராய்க்கு நேற்றைய போட்டியின் சம்பளத்தில் 30% அபராதமாக விதித்துள்ளது ஐசிசி.