திடீரென உலகக்கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்! நூதன முறையில் எதிர்ப்பு
Junaid khan opposes for elimination from wc squad
திடீரென உலகக்கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்! நூதன முறையில் எதிர்ப்பு
வரும் மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்கவுள்ளது. இந்த தொடரில் கலந்துகொள்ளும் 10 அணிகளின் வீரர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த உலகக்கோப்பை தொடருக்கான வீரர்களை பாகிஸ்தான் அணி முதலில் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியிட்டது. இந்த பட்டியலில் பாக்கிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் இடம்பெற்றார்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பழைய பட்டியலில் மாற்றம் செய்து பதிய வீரர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் அபிட் அலி, ஜுனைத் கான், பஹீம் அஷ்ரப் ஆகியோர் நீக்கப்பட்டு முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஆசிப் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தன்னை உலகக்கோப்பை அணியிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜுனைத் கான் வாயில் கருப்பு துணியை கட்டியவாறு "நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. உண்மை கசக்கும்" என எழுதி ட்விட்டரில் பதிவிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த பதிவை நீக்கிவிட்டார்.