தங்கம் வென்று சாதனை படைத்த தீபிகா குமாரிக்கு திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து.!
பிரான்ஸ் நாட்டில் உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 3 போட்டி நடந்தது. இதில், மகளிர் குழ
பிரான்ஸ் நாட்டில் உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 3 போட்டி நடந்தது. இதில், மகளிர் குழு, கலப்பு மற்றும் தனிநபர் ரிகர்வ் போட்டி ஆகிய 3 பிரிவுகளில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் தீபிகா குமாரி மற்றும் அட்டானு தாஸ் ஜோடி கலப்பு இரட்டையர் ரிகர்வ் பிரிவில் இறுதி போட்டியில் நெதர்லாந்து ஜோடியை எதிர்கொண்டது. இதில் 5-3 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இந்திய ஜோடி தங்க பதக்கம் வென்றது. பெண்களுக்கான அணியில் ரிகர்வ் பிரிவில் மெக்சிகோ அணியை 5-1 என தோற்கடித்து, தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பரி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.