10 கிராமங்களை காப்பாற்றி நடிகர் கார்த்தி செய்த அசத்தல் காரியம்! குவியும் பாராட்டுக்கள்!:
Karthi cleaned village canal
தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் கார்த்தி. இவர் அதனைத் தொடர்ந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கென ஏராளமான பெரும் ரசிகர் பட்டாளமும் உள்ளது.
நடிகர் கார்த்தி கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் விவசாயியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் விவசாயிகளுக்கு உதவும் வகையில் உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் தமிழகத்தில் விவசாயிகளுக்கு தேவையான பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் உழவன் பவுண்டேஷன் அமைப்பு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் என்ற பகுதியில் உள்ள சூரவள்ளி கால்வாயை சுத்தப்படுத்தியுள்ளது.
முள்ளும் புதருமாக, 13 கிமீ தூரம் இருந்த இந்த கால்வாயை சுத்தப்படுத்த உழவன் பவுண்டேஷன் 4 லட்சம் செலவு செய்துள்ளது. மேலும் உழவன் பவுண்டேஷன் அமைப்பை சேர்ந்தவர்கள் 21 நாட்கள் தீவிர சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கால்வாய் சுத்தப்படுத்தலால், சுற்றுவட்டாரத்தில் இருந்த 8 ஏரிகள் பாசன வசதி பெறுகிறது. 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களும், 10 கிராம மக்களின் அத்தியாவசியத் தேவைகளும் பூர்த்தியாகும் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உழவன் பவுண்டேஷன் கார்த்திக்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.