இது தாண்டா கோலி! ஒற்றை சம்பவத்தால் எதிரணியினரை மனம் உருக்கவைத்த விராட்; அப்படி என்ன செய்தார்னு பாருங்க
kholis humanity in cricket ground
நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து கொண்டிருந்தபோது அநாகரீகமாக நடந்து கொண்ட இந்திய ரசிகர்களை மைதானத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கண்டித்தார்.
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்தினை சேதப்படுத்தியதற்காக ஓராண்டுகள் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஓராண்டுகள் தண்டனை காலம் முடிந்து முதன் முதலில் இந்த உலககோப்பையில் தான் ஆஸ்திரேலிய அணிக்காக ஸ்மித் ஆடுகிறார்.
இந்நிலையில் உலககோப்பையின் 14 ஆவது ஆட்டம் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. நேற்று விடுமுறை என்பதாலும், இந்திய ஆஸ்திரேலியா அணிகள் முத்தும் ஆட்டம் என்பதாலும் இரு அணிகளுக்கும் ஏரளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.
ஆட்டத்தில் மூன்றாவதாக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிறப்பாக ஆடி கொண்டிருந்தார். ஆட்டத்தின் ஒரு சமயத்தில் ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் எல்லை கோட்டில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது இந்திய ரசிகர்கள் ஸ்டீவ் ஸ்மித்தை கேலி செய்யும் விதமாக "cheater cheater" என்ன சத்தம் போட்டனர். அதாவது ஸ்மித்தை ஏமாற்றுக்காரன் என்ன கிண்டல் செய்தனர்.
இதனை பேட்டிங் செய்துகொண்டிருந்த விராட் கோலி கவனித்துக்கொண்டிருந்தார். என்ன தான் இருந்தாலும் ஸ்மித்தும் ஒரு சக மனிதன் தானே. அவருக்கு நிச்சயம் மனம் வேதனைபட்டிருக்கும். இதனை உணர்ந்த விராட் கோலி உடனே ரசிகர்களை நோக்கி வந்து, இனி அப்படி கேலி செய்யாதீர்கள் என கண்டித்தார். மேலும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் கைதட்டி ஆரவாரம் செய்யுங்கள் என சைகையில் காட்டினார்.
விராட் கோலியின் இந்த ஆதரவை கண்டு ஸ்டீவ் ஸ்மித் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தார். அதனை தொடர்ந்து விராட் கோலிக்கு கைகுலுக்கி தனது நன்றியை தெரிவித்தார் ஸ்டீவ் ஸ்மித். விராட் கோலியின் இந்த செயலினை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.