எங்கள் அணி தோல்விக்கு இதுதான் காரணம்..! உண்மையை போட்டுடைத்த கே.எல்.ராகுல்.!
எங்கள் அணி தோல்விக்கு இதுதான் காரணம்..! உண்மையை போட்டுடைத்த கே.எல்.ராகுல்.!
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-லின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 207 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 193 ரன்களை மட்டுமே எடுத்து பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது.
நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் லக்னோ அணி போட்டியை விட்டு வெளியேறியது. இதனைத்தொடர்ந்து தங்கள் அணி தோல்விக்கு காரணம் குறித்து அந்த கே.எல்.ராகுல் கூறுகையில், எங்கள் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததற்கு மோசமான பீல்டிங் தான் காரணம். முக்கியமான கேட்சுக்களை தவற விட்டதும் வெற்றி பெறாததற்கான காரணம்.
நாங்கள் வெற்றி பெறாததற்கான காரணங்கள் இது மிகவும் வெளிப்படையானது. எளிதான கேட்ச்களை விட்டது ஒருபோதும் உதவாது. முதல் மூன்று இடங்களில் உள்ள ஒருவர் சதம் அடித்தால், அந்த அணி பெரும்பாலும் வெற்றி பெறும். நாங்கள் நிறைய நேர்மறை எண்ணங்களை திரும்பப் பெறுவோம். நாங்கள் நிறைய தவறுகளை செய்துள்ளோம், ஒவ்வொரு அணியும் அதைச் செய்கிறது. இது ஒரு இளம் அணி. அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள் என்று கூறினாா்.