×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வித்யாசமான முறையில் துவங்கப்பட்ட மாபெரும் ஜல்லிக்கட்டு! தெலங்கானா ஆளுநர் தமிழிசை, ஈஷா சத்குரு பெருமகிழ்ச்சி!

kovai jallikattu started diffrent way

Advertisement

கோவை மாவட்டம், செட்டிபாளையம் அருகே ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு விழா நடைபெற்றது. செட்டிப்பாளையத்தில் மூன்றாவது ஆண்டாக இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதை, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி,  தொடங்கி வைத்தார். 

அந்த ஜல்லிக்கட்டு விழாவில்,1000க்கும் அதிகமான காளைகளும், 600 ஜல்லிக்கட்டு வீரர்களும் பங்கேற்றனர். அந்த பிரமாண்ட ஜல்லிக்கட்டு விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஆகியோர் கலந்துகொண்டனர். 

அந்த மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் மாடுகளும் களமிறங்கின. காளைகளை அடக்கும் காளையர்களுக்கும், அடக்க முடியாத காளைகளுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. 

காளைகளை தழுவிய வீரர்களுக்கும், வெற்றிபெற்ற காளைகளுக்கும் முதல்பரிசாக கார், இரண்டாம் பரிசாக பைக். மூன்றாம் பரிசாக குளிர்சாதனப்பெட்டி வழங்கப்பட்டது. பல வீரர்களுக்கும், காளைகளுக்கும் தங்க நாணயங்களை பரிசாக வழங்கினார் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கு ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை ஆரம்பிப்பதற்கு முன்பு ஜல்லிக்கட்டு விளையாட்டை சிறப்பிக்கும் வகையிலும், கோவை மாவட்டத்தை புகழும் வகையிலும் பிரமாண்டமாக பாட்டு ஒன்றை பாடி நடனமாடி ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கினர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jallikattu #thamilisai #sathguru #isha #kovai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story