ஒருநாள் போட்டியில் இதுவே மிக மோசமான சாதனை..! 18 ஓவர்களுக்குள் முடிந்த ஒரு நாள் போட்டி.!
Lowest ODI score in International cricket match
நேபாளம் மற்றும் USA அணிகள் மோதிய ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு மோசமான சாதனைகள் படைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. ஐசிசி உலகக் கோப்பை லீக் போட்டியில் நேபாளம் - யு.எஸ்.ஏ அணிகள் மோதின. முதலில் பேட் செய்த யு.எஸ்.ஏ அணி 35 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது.
யு.எஸ்.ஏ அணி வீரர் சேவியர் மார்செல் 15 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ரன்களாகும். நேபாள அணியின் வீரர் சுஷன் பாரி 16 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை அடுத்து களமிறங்கிய நேபாளம் அணி 32 பந்துகளில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் குறைந்த பந்துகளில் எதிர் அணியை வெற்றிபெற்ற அணி என்ற பெருமையை நேபாள அணி பெற்றுள்ளது. மேலும், யு.எஸ்.ஏ அணி இன்று அடித்த 35 ரன்களே ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட மிக குறைந்தபட்ச எண்ணிக்கை ஆகும்.இதற்கு முன்னதாக கனடா (36), ஜிம்பாவே (38), இலங்கை (43) ரன்கள் எடுத்ததே குறைந்தபட்ச எண்ணிக்கையாக இருந்தது.