×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா! இத்தன வருஷத்துக்கப்பற தொடர் நாயகன் விருது பெறும் தல தோனி.!

mahendra sing dhoni after 10 years man of the series

Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடி இந்திய அணியை வெற்றி பெற வைத்த தல தோனி 10 வருடங்களுக்கு பிறகு தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 , 5 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. இந்நிலையில் டி20 போட்டிகள் சமநிலையில் முடிந்தது அதன்பிறகு தொடங்கிய டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 2-1 என்ற முறையில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.



 

அதன் பிறகு தொடங்கிய ஒருநாள் போட்டித்தொடரில் நடந்து முடிந்த 2 போட்டிகளின் முடிவுகளின் படி, இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. இந்நிலையில் மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு 231 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதனை தொடர்ந்து ஆடிய இந்திய வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தனர். இந்த நிலையில் இந்திய அணி தோல்வியுரப்போகிறது என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் 



 

தோனியும் கேதர் ஜாதவும் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மிகவும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் ஆடிய அவர்கள் இருவரும் முறையே தோனி 87 , ஜாதவ் 61 ரன்கள் விளாசினர். முடிவில் இந்திய அணி 49.2 ஓவர்களில் வெற்றி இலக்கான 234 ரன்களை எட்டி சிறப்பான வெற்றி பெற்றது.

இந்த ஒரு நாள் தொடரில் தொடர்ந்து மூன்று போட்டியிலும் அரைசதம் அடித்த தோனி மேன் ஆப் தி சீரிஸ் அவார்டு பெற்றார். முதல் ஒரு நாள் போட்டியில் 51 ரன்னும், 2ஆவது ஒரு நாள் போட்டியில் 55 (நாட் அவுட்) ரன்னும் எடுத்திருந்தார். 3 போட்டியிலும் சேர்த்து 193 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 10 வருடத்திற்கு பிறகு தோனி கைப்பற்றும் மேன் ஆப் தி சீரிஸ் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்தமாக தோனி 7 முறை மேன் ஆப் தி சீரிஸ் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#india vs australia #m.s dhoni #cricket
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story