காலம் போன கடைசியில தோனி செய்த சிறப்பான சம்பவம்; புதிய சாதனை.!
mahendra singh highest age in new record from australia
மிக அதிக வயதில் தொடர் நாயகன் விருது வென்ற முதல் இந்தியர் என்ற சரித்திர வரலாற்று சாதனையை புரிந்துள்ளார் தல தோனி.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 , 5 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. டி20 போட்டிகள் சமநிலையில் முடிந்தது அதன்பிறகு தொடங்கிய டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 2-1 என்ற முறையில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
அதன் பிறகு தொடங்கிய ஒருநாள் போட்டித்தொடரில் நடந்து முடிந்த 2 போட்டிகளின் முடிவுகளின் படி, இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் யார் வெற்றி பெறுவது என்று இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு 231 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதனை தொடர்ந்து ஆடிய இந்திய வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி தோல்வியுரப்போகிறது என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த நிலையில்
தோனியும் கேதர் ஜாதவும் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மிகவும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் ஆடிய அவர்கள் இருவரும் முறையே தோனி 87 , ஜாதவ் 61 ரன்கள் விளாசினர். முடிவில் இந்திய அணி 49.2 ஓவர்களில் வெற்றி இலக்கான 234 ரன்களை எட்டி சிறப்பான வெற்றி பெற்றது.
இந்த தொடரில் தோனி, முதல் போட்டியில் 51 ரன்னும், 2ஆவது போட்டியில் 55 (நாட் அவுட்) ரன்னும் எடுத்திருந்தார். 3 போட்டியிலும் சேர்த்து 193 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 10 வருடத்திற்கு பிறகு தோனி கைப்பற்றும் மேன் ஆப் தி சீரிஸ் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்தமாக தோனி 7 முறை மேன் ஆப் தி சீரிஸ் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த தொடரில் தோனி ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார். அதாவது மிகவும் அதிக வயதில் தொடர் நாயகன் விருது வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு, 1987 ஆம் ஆண்டு இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 37 வயது 191 நாட்களில் தொடர் நாயகன் விருது வென்றார். தற்போது தோனி 37 வயது 195 நாட்களில் இந்த சாதனையை புரிந்துள்ளார்.