ஒரே மைதானத்தில் ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியினர்! வைரல் புகைப்படம்
Men and women cricket match in same ground

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட கையோடு, நாடு திரும்பாமல் அங்கிருந்து நியூசிலாந்துக்கு சென்றது இந்திய கிரிக்கெட் அணி.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி வரும் 23-ம் தேதி நேப்பியர் நகரில் உள்ள மெக்லேன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.
அதே நேரத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் நியூலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இருநாட்டு மகளிர் கரிக்கெட் அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகள் நடைபெற உள்ளன.
மகளிர் அணியின் முதல் ஒருநாள் போட்டி வரும் 24ஆம் தேதி ஆண்கள் போட்டி நடைபெறும் அதே நேப்பியர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த தொடர்களுக்கான கோப்பையை அறிமுகப்படுத்தும் விழாவில் ஆண், பெண் கிரிக்கெட் அணியின் இருநாட்டு கேப்டன்களும் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணயத்தில் வெளியாகி உள்ளன.