டி20 ஆட்டத்தில் இப்படித்தான் விளையாட பார்ப்பார்கள்.. எனவே உஷாரா இருக்க வேண்டும்.! தோனியின் அட்வைஸ்
டி20 ஆட்டத்தில் இப்படித்தான் விளையாட பார்ப்பார்கள்.. எனவே உஷாரா இருக்க வேண்டும்.! தோனியின் அட்வைஸ்
ஐபிஎல் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகள் மூலமாக திறமை வாய்ந்த இளம் இந்திய வீரர்கள் உருவாகி வருகின்றனர். மும்பையின் ஹர்திக் பாண்டியா முதல் தமிழகத்தின் நடராஜன் வரை இந்த ஐபிஎல் போட்டிகள் தான் அவர்களின் திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம்பிடித்தனர்.
இந்த ஐபிஎல் போட்டிகள் திறமையான இளம் வீரர்களை கண்டறிவதுடன் சர்வதேச பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் அனுபவம் மற்றும் அறிவுரையை பெற உதவியாக உள்ளது. அந்தவகையில், சென்னை அணியின் நெட் பவுலர் சல்மான் கான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியிடம் பெற்ற அறிவுரையை பற்றி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், சென்னை அணியில் இருந்து நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டதால் நான் உற்சாகமாக இருந்தேன். டி20 ஆட்டத்தின் பெரும்பாலான நேரங்களில் பேட்ஸ்மேன் ஆஃப் ஸ்பின்னர்களை அடித்து விளையாடவே பார்ப்பார்கள் அதனால் எப்போதும் சிந்தித்து பந்து வீச வேண்டும் என தோனி எனக்கு அறிவுரை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.