×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரே ஆட்டத்தில் இத்தனை சாதனைகளா! அனைவரையும் அசர வைத்த இங்கிலாந்து அணி

multiple records of england in wc

Advertisement

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் 24 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி பல சாதனைகளைப் படைத்து 397 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக பைர்ஸ்டாவ் உடன் ஜேம்ஸ் களமிறங்கினார். ஆட்டத்தின் 10 ஆவது ஓவரில் 26 ரன்கள் எடுத்து ஜேம்ஸ் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் தனது வழக்கமான ஆட்டத்தை ஆடினார். பைர்ஸ்டாவ் மற்றும் ஜோ ரூட் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தனர். 30 ஆவது ஓவரில் பைர்ஸ்டாவ் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் இயான் மோர்கன் ஆரம்பம் முதலே தனது அதிரடியை காட்டத் துவங்கினார். ஜோ ரூட் 88, இயான் மோர்கன் 148 ரன்கள் எடுத்து ஆட்டம் இலக்க இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் எடுத்தது. இந்த ஒரு இன்னிங்சில் மட்டும் இங்கிலாந்து அணி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. அதன் பட்டியல் இதோ:

- 71 பந்துகளில் 148 ரன்கள் அடித்த இயான் மோர்கன் 57 பந்துகளில் சதமடித்தார். உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்த பந்தில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார் இயான் மோர்கன்.

- இந்தப் போட்டியில் இயான் மோர்கன் 17 சிக்சர்களை விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் உலக கோப்பை போட்டிகளில் தனி நபர் ஒருவர் ஒரு இன்னிங்சில் அடித்த அதிகபட்ச சிக்சர் இதுவாகும். இவருக்கு முன்னதாக உலகக்கோப்பையில் கிரிஸ் கெயில் அதிகபட்சமாக 16 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

- உலகக் கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்களை எடுத்தது வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார் இயான் மோர்கன்.

- இந்த போட்டியில் இயான் மோர்கன் மற்றும் ஜோ ரூட் இருவரும் இணைந்து 189 ரன்கள் அடித்தனர். உலகக்கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிகபட்சமாக அடித்துள்ள பார்ட்னர்ஷிப் இதுதான்.

- இந்த போட்டியில் இங்கிலாந்து அணி மொத்தம் 25 சிக்ஸர்களை விளாசியது. உலகக்கோப்பை மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒரு அணி அடித்துள்ள அதிகபட்ச சிக்சர்கள் இதுதான். 

- உலகக் கோப்பை மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி அடித்துள்ள அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#wc2019 #eng vs afg #England #eion morgan #Joe root #most sixes #most sixes in odi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story