2020 ஒலிம்பிக் நடக்குமா? நடக்காதா.? ஜப்பான் பிரதமர் அதிரடி!
Olympic postponed
சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக அளவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டோக்கியோ ஒலிம்பிக் 2020 திட்டமிட்ட படி நடைபெறும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே சமீபத்தில் கூறியிருந்தார். 2020 ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகத்தையே உலுக்கி வருகிறது. அதேபோல் ஜப்பானிலும் அதிகப்படியானோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரஸ்பீதியால் பல்வேறு நாடுகள் ஒலிம்பிக் போட்டியில்கலந்து கொள்வதில் இருந்து விலகி உள்ளன.
இந்த நிலையில் ஒலிம்பிக் ஏற்பாடு குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கூறுகையில், ஜூலை 24 ஆம் தேதி திட்டமிடப்பட்டபடி 2020 போட்டி நடைபெறாது என முதல் முறையாக தெரிவித்துள்ளார்.