இனி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி சாப்பிடக்கூடாது! மிஸ்பாவின் அதிரடி!
pakistan cricket players dont eat briyani
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் மற்றும் தேர்வாளராக மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது உள்ளூர் பாக். கிரிக்கெட் வீரர்களின் உணவுமுறையில் கட்டுப்பாடு விதித்துள்ளார். அதன்படி, வீரர்களுக்கான உணவு முறை பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பிரியாணி மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிர்வாகிகள் கூறுகையில், ‘பாகிஸ்தான் வீரர்கள் உணவு முறையை ஒழுங்காக கடைபிடிப்பதில்லை. எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகளையும், ஜங் உணவுகளையும் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் மிஸ்பா உல் ஹக் ஒவ்வொரு வீரர்களிடமும் உடல் தகுதிக்காக, உணவு முறையை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இனிமேல் பாகிஸ்தான் வீரர்களின் சாப்பாட்டில் இனி பிரியாணியோ, எண்ணெய் மிகுந்த பதார்த்தங்களோ இருக்காது. சத்து நிறைந்த தானியங்கள், பழங்கள், நன்கு சமைக்கப்பட்ட அசைவ உணவுகள், கொழுப்பை கரைக்கும் உணவு வகைகளே வழங்கப்படும். இதற்காக கையேடு ஒன்று பராமரிக்கப்பட இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அதைப் பின்பற்றாதவர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்’ என தெரிவித்துள்ளனர்.