தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அனைத்து போட்டிகளிலும் இந்தியா ஜெயிக்க வேண்டும்! அந்தர் பல்டி அடிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்!

pakistan fans support to indian players

pakistan-fans-support-to-indian-players Advertisement


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

இந்த உலகக் கோப்பை தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகளில் இதுவரை எந்த போட்டியிலும் தோல்வி பெறாத ஒரே அணி இந்தியா மட்டுமே என்ற பெயரை தக்கவைத்துள்ளது இந்திய அணி. இந்தநிலையில் நாளை  இந்தியா  இங்கிலாந்துடன் மோதுகின்றது.

பாகிஸ்தான் அணி, முதல் 5 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று பின்தங்கியிருந்தது. இதனையடுத்து ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. பின்னர் கடைசியாக நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணி களுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று 7 புள்ளிகளை பெற்றுள்ளது.அடுத்து ஆப்கான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு நுழைய அந்த அணிக்கு வாய்ப்புள்ளது.

india vs england

இந்தநிலையில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகள் முதன் மூன்று இடத்தில் இருக்கும் என தெரிகிறது. நான்காவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் உள்ளன. 

இந்திய அணி அடுத்து எதிர்கொள்ளும் இங்கிலாந்து, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அபார வெற்றி பெற்றால் அது பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக முடியும். எனவே பாகிஸ்தான் ரசிகர்கள், நாளை நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#india vs england #Pakistan fans
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story