பல பெண்களுடன் தொடர்பு: பெண்களை ஏமாற்றிய விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பாகிஸ்தான் வீரர்!
pakistan player ask sorry
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சொதப்பினாலும், துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் சில போட்டிகளில் சிறப்பாக ஆடினார். இவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் இமாம் உல் ஹக் பல பெண்களுடன் வாட்ஸ் அப்பில் உரையாடிய படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பல பெண்களை அவர் ஏமாற்றியதாக பெண் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் படங்களை வெளியிட்டார்.
இவ்விவகாரத்திற்கு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. ஆனால், இமாம் இது குறித்து எந்த பதிலும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குனர் வாசிம் கான், இந்த விவகாரம் குறித்து இமாம் உல் ஹக்கிடம் பேசியபோது அவர் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘இது இமாமின் தனிப்பட்ட விவகாரமாக இருந்தாலும் வீரர்கள் ஒழுக்கத்தையும், நெறிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நாட்டுக்காக விளையாடும்போது அவர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என நம்புகிறோம்’ என தெரிவித்துள்ளார்.