வருணபகவான் குறுக்கீடு., பாகிஸ்தான் - இலங்கை போட்டி தொடங்குவதில் தாமதம்!!
வருணபகவான் குறுக்கீடு., பாகிஸ்தான் - இலங்கை போட்டி தொடங்குவதில் தாமதம்!!
16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றன.
லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்க தேச அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
சூப்பர்-4 சுற்றில் இதுவரை இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் வங்க தேசத்தையும், இந்திய அணி தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியுள்ளது. அதன்பின், இந்தியா-இலங்கை அணிகள் மோதிய போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதியானது.
தற்போது, பாகிஸ்தான் - இலங்கைக்கு இடையேயான சூப்பர் -4 சுற்று போட்டி மழையின் காரணமாக தாமதமாகிறது. 2.30 மணிக்கு டாஸ் போட்டு 3 மணிக்கு போட்டியை தொடங்க இருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால், தாமதம் நிலவுகிறது.