அமர்களமான ஆரம்பம்! அதிசயம் நிகழ்த்த தயாராகியது பாக்கிஸ்தான்
Pakistan won the toss and bat first
லண்டன் லார்ட்சில் இன்று 43-வது உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, வங்காளதேசத்துடன் மோதுகிறது. பாகிஸ்தான் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 9 புள்ளியுடன் 5-வது இடத்தில் உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அதன் புள்ளி எண்ணிக்கை 11 ஆக உயரும். அப்போது நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் தலா 11 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். இதையடுத்து ரன்-ரேட் அடிப்படையில் ஒரு அணி அரையிறுதிக்கு தேர்வாகும்.
நியூசிலாந்து +0.175 என்று ரன்ரேட்டில் வலுவாக காணப்படுகிறது. பாகிஸ்தானின் ரன்ரேட் -0.792 என்று மிகவும் பின்தங்கி உள்ளது. எனவே நியூசிலாந்தின் ரன்ரேட்டை பாகிஸ்தான் முந்த வேண்டும் என்றால் இமாலய வெற்றி பெற்றாக வேண்டும்.
அதாவது முதலில் பேட் செய்து பாகிஸ்தான் 400 ரன்கள் குவித்தால், வங்காளதேசத்தை 316 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். 350 ரன்கள் சேர்த்தால், வங்காளதேசத்தை 311 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியாக வேண்டும். ஒருவேளை வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்தால் ஆரம்பத்திலே பாக்கிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிடும் நிலை இருந்தது.
இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக பாக்கிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஆரம்பமே பாக்கிஸ்தான் அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. சர்பராஸ் சொன்னதை போல் அதிசயம் நிகழுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.