×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாகிஸ்தான் அணிக்கு மேலும் பின்னடைவு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

பாகிஸ்தான் அணிக்கு மேலும் பின்னடைவு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Advertisement


பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4 ஆம் தேதி ராவல்பிண்டியில்  தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் வரும் 4-ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அவரால் விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது. 

ஏற்கெனவே பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, ஆல்-ரவுண்டர் பஹீம் அஷ்ரப் ஆகியோர் காயம் காரணமாக முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் கொரோனாவால் விலகியிருப்பது பாகிஸ்தான் அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pakisthan #Harris Raouf
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story