ஆசியக் கிரிக்கெட் சங்கம் இந்திய அணிக்கு சாதகமாக செயல்படுகிறது!. பாக்கிஸ்தான் கேப்டன் குற்றசாட்டு!.
ஆசியக் கிரிக்கெட் சங்கம் இந்திய அணிக்கு சாதகமாக செயல்படுகிறது!. பாக்கிஸ்தான் கேப்டன் குற்றசாட்டு!.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இலங்கை, ஹாங்காங் அணிகள் தோல்வி காரணமாக வெளியேறியுள்ளன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி ஹாங்காங்கை போராடி வென்றது.
இதனால் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற உள்ளன. இன்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியும் துபையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பராஸ் அகமது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குற்றசாட்டு ஒன்றை கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘இந்த தொடருக்காக முதலில் வெளியிடப்பட்ட கால அட்டவணையில், இந்தியா சில போட்டிகளில் அபுதாபியில் விளையாடும் வகையில் இருந்தது.
ஆனால், தற்போது அனைத்துப் போட்டிகளும் துபாயில் விளையாடும் வகையில் இந்தியாவுக்கு சாதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. போட்டி என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் என்ற அணிகள் எல்லாம் பார்க்கக் கூடாது என கூறினார்.
மேலும் அட்டவணையை மாற்றியது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை மேற்கொண்டு வருகிறது’ என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பி.சி.சி.ஐ-யின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,
‘அபுதாபியில் இருக்கும் ஐயாத் மைதானத்தை விட துபாயில் இருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் மிகப் பெரியது. ஏறக்குறைய 30 ஆயிரம் பார்வையாளர்கள் போட்டியை நேரில் கண்டு களிக்கலாம். அதிகப்படியான ரசிகர்கள் போட்டியை பார்க்கவேண்டும் என்பதற்காகவே போட்டி அங்கு நடத்தப்படுகிறது என கூறினார்.