இதுதான் சார் அப்பா பாசம்..!! உலக சாதனை படைத்துவிட்டு கதறி அழுத குருணால் பாண்டியா! வைரல் வீடியோ..
மறைந்த தனது தந்தையை நினைத்து இந்திய வீரர் குருணால் பாண்டியா மைதானத்தில் கண்ணீர் சிந்தி அழு
மறைந்த தனது தந்தையை நினைத்து இந்திய வீரர் குருணால் பாண்டியா மைதானத்தில் கண்ணீர் சிந்தி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேற்று மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் அடித்தது. இந்திய அணி வீரர் தவான் 98 ரன்களில் ஆட்டம் இழக்க, KL ராகுல் மற்றும் குருணால் பாண்டிய இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
கடைசி 10 ஓவர்களில் இந்த இணை 100 ரன்களும் மேல் அடித்தது. இந்நிலையில் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியிலையே மிக சிறப்பாக விளையாடி அரைசதத்தை கடந்துள்ளார் குருணால் பாண்டியா. அதுவும் 26 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார். இதன் மூலம் அறிமுக போட்டியில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் படித்துள்ளார் குருணால் பாண்டியா.
இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் முடிந்ததும் முரளி கார்த்திக் குருணால் பாண்டியாவிடம் இந்த சாதனை குறித்து கேட்ட போது, “இது என் தந்தைக்காக..” என்று கூறிய நிலையில் அழத்தொடங்கிவிட்டார்.. அவரால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தமுடியவில்லை.. இதனை பார்த்து அவரது இளைய சகோதரர் ஹர்திக் பாண்டியா அங்கு வந்து அவரை கட்டித்தழுவி அவருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் இந்திய அணி வீரர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறினர். குருணால் - ஹர்திக் பாண்டியா சகோதரர்களின் தந்தை ஹிமன்ஷு பாண்டியா கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். சகோதர்கள் இருவரும் இன்று இந்திய அணியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், தங்களது கிரிக்கெட் திறமைக்கு அடித்தளமிட்ட தனது தந்தையை நினைத்து உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் குருணால் பாண்டியா.