வேலையில்லாத கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு 3 மாதம் உதவித்தொகை.. பாக் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!
PCB announces money offer to women cricketers
தற்போதைய சூழ்நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமலும் வேறு எந்த வேலைகளுக்கும் செல்ல முடியாமல் இருக்கும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 3 மாத உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
கொரோனா நோய் தாக்கத்தால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது. தற்போது இங்கிலாந்தில் மட்டும் ஆண்கன் சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
பாக்கிஸ்தானில் உள்ளூர் போட்டிகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதால் அந்நாட்டு கிரிக்கெட் வீராங்கனைகளில் பெரும்பாலானோர் வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு வேறு எந்த வேலையும் இல்லை என்பதும் வேதனையான ஒன்று.
எனவே அவர்களின் அன்றாட செலவிற்காக பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடுத்த 3 மாதங்களுக்கு மாதம் ரூ.25000 உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. முதல்கட்டமாக இந்த தொகையானது 25 உள்நாட்டு வீரங்கனைகளுக்கு வழங்கப்பட உள்ளது.