இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல வாய்ப்பேயில்லை! பிரபல இங்கிலாந்து வீரர் அதிரடி ட்வீட்
Pieterson told england won't win worldcup
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரின் லீக் சுற்று இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. தற்போது வரை ஆஸ்திரேலியா அணி மட்டும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
தரவரிசையில் முதல் இடம், சொந்த மண்ணில் உலகக்கோப்பை தொடர், இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா? இங்கிலாந்து தான் உலகக்கோப்பையை வெல்லும் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் நிலைமையோ இப்போது தலைகீழாக மாறியுள்ளது. இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேற அடுத்த இரண்டு போட்டிகளில் கட்டாயம் வெல்ல வேண்டிய சூழ்நிலை. அந்த இரண்டு போட்டிகளுமே பலம் வாய்ந்த நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுடன்.
இந்நிலையில் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல வாய்ப்பேயில்லை என முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இங்கிலாந்து லீக் போட்டியில் நியூசிலாந்தை வென்று பின்னர் அதே அணியை அரையிறுதியிலும் வென்று, பின்னர் இறுதிப்போட்டியில் இந்தியாவை வெல்ல வேண்டும். இதற்கு வாய்ப்பேயில்லை" என கூறியுள்ளார்.