சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்!
praveen kumar retires cricket
2007-ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை இந்திய அணியில் துவக்க பந்துவீச்சாளராக களமிறங்கியவர் வேகப்பந்துவீச்சாளர் பிரவீன் குமார். இந்தியாவின் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பிடித்து தனது ஸ்விங் பௌலிங்கால் பிரபலமானவர்.
இவர் 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்காக முதல் முதலில் களமிறங்கினார். இந்திய அணிக்காக இவர் 170-வது ஒருநாள் விளையாட்டு வீரராக அந்த போட்டியில் அறிமுகமானார். இவரது கடைசி ஒருநாள் போட்டி 2012 ஆம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது தான்.
இந்திய அணிக்காக 68 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பிரவீன் குமார் 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2011ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடருக்கு தேர்வான பிரவீன் குமாருக்கு ஏற்பட்ட காயத்தால் கடைசி நேரத்தில் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உலக கோப்பை அணியில் இடம் பிடித்தார்.
இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரவீன்குமார் 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 268 ஆவது வீரராக இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான பிரவீன்குமார் தனது முதல் ஆட்டத்திலேயே 2011-இல் நடைபெற்ற போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணிக்காக 10 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பிரவீன்குமார் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி வந்தார்.
இந்நிலையில் 32 வயதாகும் பிரவின்குமார் இன்று கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார் வேகப்பந்துவீச்சாளர் பிரவீன்குமார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் "இந்திய அணியில் விளையாடியது எனக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுத்தது. எனது வாழ்க்கையில் முக்கியமான பகுதிகள். கடினமான உள்ளதோடு இதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எனக்கு உதவியாக இருந்து எனது கனவுகளை நினைவாகிய அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.