இந்திய வீரர்களுக்கு எதிராக இனவெறி பேச்சு.! பந்து வீசுவதை நிறுத்திய கலங்கிப்போன சிராஜ்.!
இந்திய வீரர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையில் பேசியதால் 6 பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது, பீல்டிங் செய்துகொண்டிருந்த இந்திய வீரர்கள் பும்ரா, சிராஜ் ஆகியோரைப் ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர்.
டெஸ்ட் போட்டியின் 4 வது நாளான இன்றும் சில ரசிகர்கள் இனவெறியை தூண்டும் வகையில் பேசியதால், கவனத்தை ஈர்க்கும் வகையில் 10 நிமிடங்கள் முகமது சிராஜ் பந்து வீசுவதை நிறுத்தினார். இது தொடர்பாக இந்திய கேப்டன் ரஹானே நடுவர்களிடம் புகார் தெரிவித்துள்ளார்.
சிராஜை திட்டியவர்கள் மது குடித்து இருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. சிராஜ் நிற வெறிக்கு ஆளானதை மற்ற வீரர்களும், அணியின் கேப்டன் ரஹானேவும் நடுவர்களிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இனவெறி புகாருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளது.
இனவெறியை தூண்டும் வகையில் செயல்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்திய வீரர்களை கிண்டல் செய்த 6 ரசிகர்கள் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும், இந்திய வீரர்களை குறிவைத்து இனவெறியை தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதியளிப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.