தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அவரா?? பெரிய பவுலரை கோச் ஆக ஒப்பந்தம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்!! உற்சாகத்தில் ரசிகர்கள்..

அவரா?? பெரிய பவுலரை கோச் ஆக ஒப்பந்தம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்!! உற்சாகத்தில் ரசிகர்கள்..

Rajasthan royals appointed Malinga as bowling coach Advertisement

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவை தங்கள் அணியின் பவுலிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

வரும் மார்ச் 26 முதல் ஐபில் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்தமுறை 10 அணிகள் விளையாடுகின்றனர். ஐபில் போட்டி விரைவில் தொடங்கவுள்ளதை அடுத்து அனைத்து அணிகளும் தற்போதில் இருந்தே தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் தங்கள் அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளரை அறிமுகம் செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், மும்பை அணியில் நீண்ட காலமாக விளையாடிவந்த லசித் மலிங்காவை தங்கள் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்திருப்பதாக அந்த அணி அறிவித்துள்ளது.

IPL 2022

"ஐபிஎல்-க்கு திரும்பியது எனக்கு ஒரு அற்புதமான உணர்வு என்றும், அணியின் வேகப்பந்து வீச்சாளர்களால் நான் உற்சாகமாக உள்ளேன்" எனவும் மலிங்கா தெரிவித்துள்ளார். யார்க்கர் மன்னன் மலிங்கா ராஜஸ்தான் அணியில் இணைந்திருப்பது அந்த அணி ரசிகர்களிடையே பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2022 #Rajashthan Royals
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story