"அஸ்வின் ஓய்வுக்கு என்ன காரணம்.?" தந்தை போட்டுடைத்த விவகாரத்தால் சர்ச்சை.!
அஸ்வின் ஓய்வுக்கு என்ன காரணம்.? தந்தை போட்டுடைத்த விவகாரத்தால் சர்ச்சை.!
அஸ்வின் அவமானப் படுத்தப்பட்டது தான் அவரது ஓய்வு முடிவுக்கு காரணமாக இருக்கும் என அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஒய்வு முடிவு
பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா -இந்தியா அணிகள் மோதுகின்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்தது. இது டிராவில் முடிவுற்றது. இதன் பின்னர், அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், அவரது இந்த முடிவை ஏற்றுக் கொள்வதாக ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
ஏர்போர்ட்டில் வரவேற்பு
அவரது கிரிக்கெட் வாழ்வு குறித்து பலரும் பாராட்டுகளை தெரிவித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து இருந்தனர். ஓய்வை அறிவித்த நிலையில், சென்னை வந்தடைந்த அஸ்வினுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் ஒன்று கூடி உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர். இந்த நிலையில், அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன் அஸ்வினின் இந்த ஓய்வு முடிவுக்கு அவமானம் காரணமாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்.
அவமானம் பற்றி போட்டுடைத்த தந்தை
இது பற்றி அவர், "இந்திய டெஸ்ட் அணியின் நம்பர் ஒன் சுழற் பந்துவீச்சாளராக இருந்த அஸ்வின் திடீரென்று ஓய்வை அறிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடிய போதும் அணியில் இடம் கிடைக்கவில்லை என்பதால்தான் இந்த ஓய்வு முடிவை அவர் எடுத்திருக்கலாம். இந்திய அணியில் அவர் விளையாடிய போது அவமானங்களை சந்தித்து இருக்கலாம்.
தனிப்பட்ட முடிவு
திடீரென இப்படி ஒரு முடிவை அறிவிக்க காரணம், அந்த அவமானமாக தான் இருக்கும். கிரிக்கெட்டின் உச்சத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் தான் இந்த ஓய்வு முடிவை அவர் அறிவித்து இருக்கலாம். எப்படி இருந்தாலும் ஓய்வு பெறுவதாக அறிவித்தது, அவருடைய தனிப்பட்ட முடிவு. அதில் நாம் தலையிட முடியாது." என்று தெரிவித்து இருக்கிறார்.