ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு காரணமான அந்த இரண்டு முக்கிய கேட்சுகள்!
Reasons for loss 3rd one day match captain finch
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இன்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதோடு, ஒருநாள் தொடரை வென்று அசத்தியது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில், கடைசி போட்டி மெல்போர்னில் இன்று நடந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 231 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அனி வீரர்கள் தொடக்கத்திலையே அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஒருவழியாக தோனி - கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் கடைசி ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என வென்றது இந்தியா.
போட்டி முடிந்ததும், தோல்விக்கான காரணம் குறித்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், சிறந்த வீரர்களுக்கு சில வாய்ப்புகளை வழங்கும்போது, அது பாதிப்பை ஏற்படுத்தும். சில கேட்ச்களை தவறவிட்டது மிகவும் தவறு. முதல் இரண்டு போட்டிகளில் நன்றாக பேட்டிங் செய்த நாங்கள் இறுதி போட்டியில் பொறுமையாக ஆடாமல் அவசரப்பட்டு விட்டோம். இந்த ஆடுகளத்தில் அடிக்க முடிந்த ஸ்கோரை விட அதிகமாக அடிக்க முயற்சித்தது தவறு என்று ஃபின்ச் தெரிவித்தார்.
தோனி களத்திற்கு வந்த முதல் பந்திலேயே கொடுத்த கேட்ச்சை மேக்ஸ்வெல் தவறவிட்டார். பின்னர் 74 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச்சை கேப்டன் ஃபின்ச் தவறவிட்டார். இந்த இரண்டு வாய்ப்புகளையும் தவறவிட்டதைத்தான் ஃபின்ச் குறிப்பிட்டார்.
ஒருவேளை தோனியின் அந்த இரண்டு கேட்சுகளில் ஒன்றையாவது ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பிடித்திருந்தால் இந்திய அணி வெற்றிபெறுவது சற்று கடினமாயிருக்கும்.