சதம் அடிக்க வேண்டுமென்பது என்பது நோக்கமல்ல; அது வேற - ரிஷப் பண்ட் ஓபன் டாக்!
Risaph pant open talk about sydney 100
நான் சதம் அடிக்க வேண்டும் என்பது என் குறிக்கோள் இல்லை. அணிக்கு என்னிடம் இருந்து என்ன தேவையோ அதை செய்வதுதான் என்னுடைய ஒரே இலக்கு என்று ரிஷப் பண்ட் வெளிப்படையாக பேசியுள்ளார்.
சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 159 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சர்வதேச அளவில் அவரது இரண்டாவது டெஸ்ட் சதமாகும்.
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் சதமடித்த இந்திய அணியின் முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார் ரிஷப் பண்ட். மேலும் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒரு விக்கெட் கீப்பர் ஆசியா கண்டத்தை தாண்டி வேறு கண்டத்தில் எடுத்துள்ள அதகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும். இவ்வாறு பல சாதனைகளை புரிந்துள்ள ரிஷப் பண்ட் சர்வதேச அளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள ரிஷப் பண்ட், "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், சதம் அடிக்கும் வரை எனக்கு சிறிது பதற்றமாக இருந்தது. முன்னதாக, இந்தியாவில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடியபோது 92 ரன்களில் இரண்டு இன்னிங்சில் அவுட்டாகிவிட்டேன். அதனால் நான் சற்று பயத்துடன் இருந்தேன், ஆனால் விரைவில் சதத்தை எட்டிவிட்டேன்.
சர்வதேச கிரிக்கெட்டில் நான் அடிக்கும் ஒவ்வொரு சதமும் எனக்கு மிகவும் முக்கியம். ஏனென்றால், இப்போதுதான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளேன். அதற்காக, சதம் அடிக்க வேண்டும் என்பது தான் என் நோக்கம் என எண்ணிவிட வேண்டாம், அணிக்கு என்னிடம் இருந்து என்ன தேவையோ அதை செய்வதுதான் என்னுடைய ஒரே இலக்கு” என்று ரிஷப் பண்ட் வெளிப்படையாக பேசியுள்ளார்.