ருத்ர தாண்டவம் ஆடிய ரிஷப் பண்ட் தல தோனி, சேவாக் சாதனைகளை தகர்த்தெறிந்தார்.!
rishab phant new record - defence - dhoni- shewaugh
ஐபிஎல் போட்டி தொடரின் 12வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
‘டாஸ்’ வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு துவக்க வீரர் தவான் (43), இங்ராம் (47), ரன்களில் அவுட் ஆகினர்.
அதன் பிறகு களமிறங்கிய ரிஷப் பண்ட் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து அதிரடியாக ரன்களை குவித்தார். இதனால் 18 பந்துகளில் அரை சதம் கடந்தார் மொத்தம் 27 பந்துகளை சந்தித்த அவர் 78 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அடங்கும்.
இதையடுத்து மும்பை அணி , 19.2 ஓவரில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் ஐபிஎல்., வரலாற்றில் டெல்லி அணிக்காக குறைந்த பந்தில் அரைசதம் கடந்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் அதிரடி மன்னன் சேவக் சாதனையை முறியடித்தார் பண்ட்.
17 மோரிஸ் எதிர்- குஜராத், 2016
18 ரிஷப் பண்ட் எதிர் - மும்பை இந்தியன்ஸ், 2019 *
20 சேவக் எதிர்- ராஜஸ்தான், 2012
21 சேவக் எதிர்- ராஜஸ்தான், 2010
தவிர, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக குறைந்த பந்தில் (18 பந்துகள்) அரைசதம் கடந்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து புது வரலாறு படைத்தார் பண்ட். முன்னதாக கடந்த 2012ல் மும்பை அணிக்கு எதிராக தோனி 20 பந்தில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது.