இந்திய அணியை சரிவில் இருந்து மீட்ட ரோகித் சர்மா, ரஹானே! இருவரும் அரைசதம்! சதத்தை நோக்கி ரோஹித்!
rohit and rahane crossed fifty runs
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது இன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் மயங் அகர்வால் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பத்திலே சிறப்பாக பந்து வீசினர் தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்கள். ரபடா வீசிய 5 ஆவது ஓவரில் மயங் அகர்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா ரன் ஏதும் எடுக்காமல் ரபடா வீசிய 9 ஆவது ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி 12 ரன்கள் எடுத்த நிலையில் நோட்ஜ் வீசிய 16 ஆவது ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார்.
தற்போது ரோகித் சர்மாவும், ரஹானேவும் களத்தில் இருந்து அதிரடியாக ஆடிவருகின்றனர். அதிரடியாக ஆடிவரும் ரோகித் சர்மா 112 பந்துகளுக்கு 75 ரன்களும், ரஹானே 70 பந்துகளுக்கு 50 ரன்களும் அடித்து இருவரும் அரைசதம் அடித்தனர். ஆரம்பத்திலே மூன்று விக்கெட்டுகள் சரிந்தாலும் ரோகித் சர்மாவும், ரஹானேவும் களத்தில் இருந்து அணிக்கு பலம் சேர்த்துள்ளனர்.