கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்து ரோஹித்தை கட்டியணைத்த சிறுவன்; ரோஹித்தின் நெகிழ்ச்சி செயல்..! வைரலாகும் வீடியோ..!
கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்து ரோஹித்தை கட்டியணைத்த சிறுவன்; ரோஹித்தின் நெகிழ்ச்சி செயல்..! வைரலாகும் வீடியோ..!
சிறுவன் ஆர்வமிகுதியில் ரோஹித் ஷர்மாவை கட்டிப்பிடிக்க, பாதுகாவலரின் செயலால் சிறுவனை விடும்படி ரோஹித் கூறினார்.
இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 தொடர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டி20 போட்டியில் விளையாடுகிறது. இன்று வரை 2 ஓடிஐ போட்டிகள் நடைபெற்று முடிந்துவிட்டன. 2 போட்டியிலும் இந்தியா அபார வெற்றி பெற்றுவிட்டது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 50 ஓவர்களில் 350 ரன்கள் எடுத்த இந்திய அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து ஆல் அவுட் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. இரண்டாவது போட்டி இன்று நடைபெற்ற நிலையில், முதல் போட்டியில் பேட்டிங்கில் அடித்து துவைத்த இந்திய வீரர்கள், இன்று பந்துவீச்சில் சிதறவிட்டனர்.
இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் தவித்த நியூசிலாந்து அணி, 34.3 ஓவர்களில் முடிவில் 108 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது.
இன்றைய போட்டி ராய்பூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், ராய்பூரில் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக வெற்றியடைவது இதுவே முதல் முறையாகும். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 2 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நடைபெற்ற ஆட்டத்தின் போது ரோஹித் ஷர்மா களத்தில் இருந்தபோது, அவரது ரசிகரான சிறுவன் ஒருவன் பாதுகாவலர்களை தாண்டி சென்று ரோஹித்தை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பாதுகாவலர் சிறுவனை இழுத்து சென்ற நிலையில், "அவ ன் சிறுவன், அவனை விடுங்கள்" ரோஹித் என தெரிவித்தார்.
Cricketracker Tweet
Madiwal Avinash Tweet
Mufaddal Vohra Tweet