×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நெருங்க முடியுமா! உலக கோப்பையில் புதிய சாதனை படைத்த ஹிட்மேன் ரோகித் சர்மா

rohit sharma new record in worldcup

Advertisement

உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா.

இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியின் அஞ்சலோ மேத்யூஸ் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராஹ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவருமே சிறப்பாக ஆடி சதம் அடித்தனர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் சேர்ந்து 189 ரன்கள் எடுத்தனர். ஆட்டத்தின் 31வது ஓவரில் ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கேஎல் ராகுல் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 44 ஆவது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இன்று அவர் அடித்த சதம் இந்த உலகக் கோப்பையில் ஐந்தாவது சதம் ஆகும். ஒரு உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். இதற்கு முன்பாக 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இலங்கை அணியில் சங்ககாரா 4 சதங்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#wc2019 #Rohit sharma #rohit sharma records #most 100 in worldcup #ind vs sl
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story