நம்ம புள்ளைங்க எல்லாம் பயங்கரம்... அதனால் தான் இந்த அதிகாரத்தை அவர்களிடம் கொடுத்து விட்டேன்..! டான் ரோஹித் ஓப்பன் டாக்.!
நம்ம புள்ளைங்க எல்லாம் பயங்கரம்... அதனால் தான் இந்த அதிகாரத்தை அவர்களிடம் கொடுத்து விட்டேன்..! டான் ரோஹித் ஓப்பன் டாக்.!
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதியது. நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையது முதலில் பேட்டிங் செய்து சிறப்பாக ஆடிய இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் 92 ரன்களையும், விராட் கோலி 88 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும் விளாசினர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
நேற்றைய போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அரையிறுதி சுற்றுக்கு நாங்கள் தகுதி பெற்று விட்டோம் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய அணியின் பல வீரர்கள் இந்த வெற்றிக்கு தங்களுடைய சிறப்பான பங்களைப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
டிஆர்எஸ் முடிவை எடுப்பது குறித்து கே.எல்.ராகுல் மற்றும் பவுலர்களிடம் அதிகாரத்தை கொடுத்து விட்டேன். அவர்கள் தான் எனக்காக முடிவெடுக்க வேண்டும். சில சமயம் தவறாக கூட போகலாம். அடுத்தது தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறோம். அவர்களும் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். இது நிச்சயம் நல்ல ஆட்டமாக அமையும் என நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.