ரொனால்டோவுக்கு அடிமேல் அடி... ரசிகரின் செல்போனை தட்டிவிட்டதால் ரூ.50 லட்சம் அபராதம் மற்றும் விளையாட தடை.!
ரொனால்டோவுக்கு அடிமேல் அடி... ரசிகரின் செல்போனை தட்டிவிட்டதால் ரூ.50 லட்சம் அபராதம் மற்றும் விளையாட தடை.!
போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கால்பந்தாட்ட உலகில் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.
சமீபத்தில், ரொனால்டோவை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர் டெடி ஷெரிங்ஹாம் தெரிவித்தார். அதன்படி, தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார். இந்தநிலையில், ரொனால்டோவுக்கு மேலும் ஒரு புதிய பிரச்சினை வந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஈரோ கால்பந்து க்ளப் போட்டிகளின்போது ரசிகர் ஒருவரின் மொபைலை ரொனால்டோ தட்டிவிட்டது சர்ச்சைக்குள்ளானது. அந்த சம்பவம் மீதான ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில் தற்போது ரொனால்டோவுக்கு ரூ.50 லட்சம் அபராதமும், 2 கிளப் ஆட்டங்களில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறிய நிலையில் அடுத்து அவர் இணையும் கிளப்பில் இந்த தடை தொடரும் என கூறப்பட்டுள்ளது.